இந்தியா

கேரள கதகளி நடனக்கலைஞர் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்

செய்திப்பிரிவு

கதகளி நடனக்கலைஞர், குரு செமஞ்சேரி குன்ஹிராமன் நாயர் மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘கதகளி நடனக்கலைஞர் , குரு செமஞ்சேரி குன்ஹிராமன் நாயர் மறைவால் வேதனையடைந்தேன்.

இந்திய கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் மீதான அவரது ஆர்வம் பழம்பெருமை வாய்ந்தது.

நமது பாரம்பரிய நடனங்களில், திறமையானவர்களை வளர்ப்பதற்கு அவர் சிறப்பான முயற்சிகள் மேற்கொண்டார். அவரது குடும்பத்தினருக்கும், அபிமானிகளுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி’’ என குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT