இந்தியா

தடுப்பூசியால் வலி ஏதும் இல்லை ரத்தன் டாடா கருத்து

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதில் எவ்வித வலியும் இல்லை என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கூறியுள்ளார். நேற்று கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு ட்விட்டர் பதிவில் இக்கருத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொண்டு நோய் எதிர்ப்புத் தன்மையை உருவாக்கிக் கொள்வர் என நம்புவதாக அவர் குறிப் பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள்ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இதுவரையில் 2.82 கோடிபேருக்கு ஊசி போடப்பட் டுள்ளது.

இதற்கிடையில், தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 24 மணி நேரத்தில் 24,882 ஆக அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT