இந்தியா

விசாரணைக் கைதியான சோட்டா ராஜனுக்கு வெளிநாட்டு உணவு: ராஜ உபசாரம் செய்யும் சிபிஐ அதிகாரிகள்

செய்திப்பிரிவு

பாலியில் கைது செய்யப்பட்டு, இந்தியாவுக்குக் கொண்டு வரப் பட்டு சிபிஐ காவலில் உள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜனுக்கு, சிறையில் வெளிநாட்டு உணவு வகைகள் வழங்கப்படுகின்றன.

போலி பாஸ்போர்ட் உட்படப் பல்வேறு வழக்குகளை எதிர்கொண் டுள்ள நிழல் உலக தாதா சோட்டா ராஜன், டெல்லியிலுள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தின் தரைத் தள சிறையில் அடைக்கப்பட்டுள் ளார். அவரை 10 நாட்கள் காவலில் எடுத்துள்ள சிபிஐ விசாரித்து வரு கிறது.வழக்கமாக விசாரணைக் கைதிகளுக்கு ரொட்டி, பருப்பு வகை மற்றும் ஒரு காய்கறி மட்டுமே அளிக்கப்படும். ஆனால் சோட்டா ராஜனுக்கு வெளிநாட்டு உணவு வகைகள் அளிக்கப்படுகின்றன.

மும்பையில் இருந்தது வரை இந்திய உணவு வகைகளை உண்டு வந்த சோட்டா ராஜன், 27 வருடங் களுக்கு முன் வெளிநாடு தப்பிச் சென்ற பின், உணவுப் பழக்கத்தை முற்றிலும் மாற்றி விட்டார். வேக வைத்த முட்டைகளுடன் கீரை வகைகள், பர்கர், சீஸ் சாண்ட்விச், கார்ன்பிளேக் ஆகியவற்றுடன் குளிர்ந்த காபி அல்லது ஜூஸ் ஆகியவற்றை விரும்பி உண்டு வருகிறார் சோட்டா ராஜன்.

எனவே, இந்த உணவு வகை களை நட்சத்திர விடுதிகளில் இருந்து வரவழைத்து சோட்டா ராஜனுக்கு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் சிபிஐ வட்டாரங்கள் கூறும்போது, ‘ராஜனை நல்ல மனநிலையில் இருக்கும்படி கவனித்துக் கொண் டால்தான் அவரிடம் விஷயங் களைப் பெற முடியும். சிறையில் போரடித்து விடாமல் இருக்க நான்கு கான்ஸ்டபிள்களை வெளியில் இருந்தபடி பேசிக் கொண்டிருக்க வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் பலனாக கள்ளநோட்டு மாற்று தல், தாவூத் இப்ராகிம் குறித்த தக வல்கள் போன்ற முக்கிய தகவல்கள் கிடைத்து வருகின்றன” என்றனர்.

தாவூத் உள்ளிட்டோரால் சோட்டா ராஜன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அவரை அடைத்து வைத்துள்ள சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 200 டெல்லி சிறப்புக் காவல்துறையினர், மத்திய பாதுகாப்பு படையினர் பாது காப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.

SCROLL FOR NEXT