கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு காஷ்மீர் தொகுதி வரையறை ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு

செய்திப்பிரிவு

ஜம்மு காஷ்மீரில் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளை மறுவரையறை செய்வதற்காக கடந்த ஆண்டு, தொகுதி வரையறை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இதன் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான காஷ்மீர் தொகுதி வரையறை ஆணையம் தனது பணிகளை முடிக்க மேலும் ஓராண்டு எடுத்துக்கொள்ளும்” என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் எம்.பி.க்கள் 5 பேரும் தொகுதி வரையறை ஆணையத்தின் அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். என்றாலும் பரூக் அப்துல்லா உட்பட தேசிய மாநாடு கட்சியை சேர்ந்த 3 உறுப்பினர்களும் ஆணையத்தை புறக்கணித்தனர்.

SCROLL FOR NEXT