இந்தியா

பாஜகவில் இணைந்தார் மற்றொரு திரிணமூல் எம்எல்ஏ

செய்திப்பிரிவு

மேற்கு வங்கத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அதிக அளவில் இணைந்து வருகின்றனர். இதுவரை அக்கட்சியைச் சேர்ந்த 19எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்திருப்பது திரிணமூல் காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த சூழலில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் முதல்வர் மம்தா பானர்ஜி மிகுந்த கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

தொகுதிகளில் சரிவர பணியாற்றாத எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கொடுக்க அவர் தயாராக இல்லை. இதன்காரணமாக, தங்களுக்கு சீட் கிடைக்காது என தகவல் அறிந்த பல எம்எல்ஏ-க்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், பண்டாபேஸ்வர் தொகுதி எம்எல்ஏவும், அஸன்சோல் மாநகராட்சி முன்னாள் மேயருமான ஜிதேந்திர திவாரி, திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் நேற்று இணைந்தார். இதன் மூலம் பாஜகவில் இணைந்த திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை20-ஆக உயர்ந்துள்ளது.

SCROLL FOR NEXT