இந்தியா

சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக மக்கள் திகழ வேண்டும்: பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அணுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக திகழ வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டர் வலைப்பக்கத்தில், 'சுற்றுச்சூழல் பாதுகாவலர்களாக திகழ்வதாலும், இயற்கை வளங்களை முறையாக கையாள்வதாலும் எதிர்கால சந்ததியினருக்கு நம்மால் மகிழ்ச்சியை உறுதி செய்யமுடியும்.

சுற்றுச்சூழல் தினமான இன்று, இந்த பூமியை தூய்மையான, பசுமையான இடமாக மாற்ற மக்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'நமது கலாச்சாரமே சுற்றுச்சூழலோடு ஒன்றிணைந்து வாழும் வகையில் அமைந்துள்ளது. அது நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதைப் போற்றி பாதுகாக்க வேண்டும்.

அன்றாட வாழ்வில் தனிநபர் ஒவ்வொருவர் மேற்கொள்ளும் முயற்சி இயற்கையையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க பெருமளவில் உதவும்' என்று மோடி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT