இந்தியா

வனங்கள், விலங்கு வாழ்விடங்களின் பாதுகாப்பை உறுதிசெய்க: பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

வனங்கள் மற்றும் அவற்றில் வசிக்கும் விலங்குகளின் வாழ்விடங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் வன விலங்குகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ''வன விலங்குகளின் பாதுகாப்புக்காக உழைக்கும் அனைத்து மக்களையும் நான் வணங்குகிறேன். சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள் என பல்வேறு விலங்குகளின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து கணிசமாக அதிகரித்து வருகிறது.

வனங்கள் மற்றும் அவற்றில் வசிக்கும் விலங்குகளின் வாழ்விடங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்'' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ''கிரகத்தில் ஆரோக்கியமான சூழலியல் சமநிலையைப் பராமரிக்க மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வன விலங்குகளைப் பாதுகாக்கவும் அர்ப்பணிப்புடன் செயல்பட மக்கள் முன்வர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT