இந்தியா

காஷ்மீரில் 'சூப்பர் 30' திட்டத்தில் மருத்துவர் கனவை நனவாக்கும் ராணுவம்

செய்திப்பிரிவு

காஷ்மீரில் தீவிரவாதம் தீராதபிரச்சினையாக நீடித்து வருகிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பு, காஷ்மீர் இளைஞர் களை, தீவிரவாத பாதைக்கு இழுக்க முயற்சி செய்து வருகிறது.

பாகிஸ்தானின் அத்துமீறல் தாக்குதல்களை தடுத்து வரும் ராணுவம், காஷ்மீர் இளைஞர் களை நல்வழிப்படுத்த பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல் படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக 'சூப்பர் 40' என்றதிட்டம் அமலில் உள்ளது.

இதன்மூலம் காஷ்மீர் ஏழைமாணவ, மாணவிகள் ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேர ராணுவம் சார்பில் சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமானோர் பலன் அடைந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டில் ‘சூப்பர் 30' என்ற திட்டத்தை ராணுவம் தொடங்கியது. இதன்மூலம் காஷ்மீரின் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக நீட் நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்படி விருப்பமுள்ள மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கின்றனர். அவர்களுக்கு எழுத்துதேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப் பட்டு தகுதியுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்படு கின்றனர்.

இத்திட்டத்தின் மூலம் 19 பேர் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். 33 பேர் மருத்துவப் படிப்புகளில் இணைந்துள்ளனர் என்று ‘சூப்பர் 30' பயிற்சி மையத்தின் மருத்து வர் ரோகித் ஸ்ரீ வஸ்தவா கூறினார்.

SCROLL FOR NEXT