இந்தியா

விமான நிலைய அதிகாரி மீது தாக்குதல்: ஒய்எஸ்ஆர் கட்சி எம்பி மீது வழக்கு

செய்திப்பிரிவு

திருப்பதி விமான நிலைய அதிகாரியை தாக்கியதாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி., எம்எல்ஏ மற்றும் இவர்களின் ஆதரவாளர்கள் 13 பேர் மீது போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வியாழக்கிழமை தனது நெல்லூர் மாவட்ட சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருப்பதி புதிய விமான நிலையம் வந்தார். இவரை வரவேற்க இக்கட்சியின் ராஜம்பேட்டை தொகுதி எம்.பி. மிதுன் ரெட்டி, சந்திரகிரி எம்எல்ஏ செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி மற்றும் இவர்களின் ஆதரவாளர்கள் திருப்பதி விமான நிலையம் சென்றனர். அப்போது அனுமதியின்றி விமான நிலையத் துக்குள் நுழைந்த இவர்களை, அங்குள்ள பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் விமான நிலைய மேலாளர் ராஜசேகர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜசேகர் அளித்த புகாரின் பேரில் மிதுன் ரெட்டி, செவிரெட்டி பாஸ்கர் ரெட்டி மற்றும் இவர்களின் ஆதரவாளர்கள் 13 பேர் மீது விமான நிலைய போலீஸார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர்.

SCROLL FOR NEXT