இந்தியா

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கரோனா தொற்றின் அன்றாட பாதிப்பு தொடர்ந்து உயர்வு

செய்திப்பிரிவு

நாட்டில் தற்போது கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,68,358 ஆகப் பதிவாகியுள்ளது.

இது நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பில் 1.51 சதவீதமாகும். இந்த 24 மணி நேரத்தில் 12,286 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. தற்போதைய பாதிப்புகளில் 80.33 சதவீதம், தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் பதிவாகியுள்ளது.

இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும்‌ 1,48,54,136 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 67,04,613 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 25,97,799 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 53,44,453 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரான 24,279 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 1,82,992 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,98,921 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 12,464 பேர் (97.07%) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,397 பேரும், கேரளாவில் 1,938 பேரும், பஞ்சாபில் 633 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 91 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT