இந்தியா

728 மாவட்டங்களில் தலா ஒரு விவசாய பொருள்: விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசின் புதிய அறிவிப்பு

ஆர்.ஷபிமுன்னா

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு விவசாயப் பொருள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் திட்டத்தை (One District One Focus Product - ODOFP) மத்திய அரசு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அறிமுகப்படுத்தியது.

மத்திய வேளாண் அமைச்சகத் தால் அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தில் பழங்களுக்கு 226 மாவட்டங்கள், காய்கறிகளுக்கு 107 மாவட்டங்கள், மசாலா பொருட்களுக்கு 105 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தவிர நெல், கோதுமை உட்பட பொருட்களுக்கும் மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

மொத்தம் 728 மாவட்டங் களுக்கான வேளாண் பொருள் பட்டியலை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் 36 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. கன்னியாகுமரி, நாகப்பட்டினம், செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டங்களில் மீன் பொருட்கள், தஞ்சாவூர், கோவையில் தேங்காய், திருச்சியில் வாழைப்பழம், கிருஷ்ணகிரியில் மாம்பழம் என பொருட்கள் இடம் பெற் றுள்ளன. வேளாண் பொருட்களை விளைவிக்க எம்ஐடிஎச், என்எப் எஸ்எம், ஆர்கேவிஒய், பிகேவிஒய் போன்ற திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு உதவிகள் கிடைக்கும்.

இதுதொடர்பாக அனைத்து துறைகளின் நிர்வாகக் குழு கூட்டத்தை நிதி ஆயோக் கடந்த வாரம் நடத்தியது. இதில், மாவட்ட அளவில் அந்தந்த விவசாயப் பொருட்களுக்குமுக்கியத்துவம் அளிக்க வலியுறுத்தப்பட்டது.

35 சதவீத மானியம்

மத்திய உணவு பதப்படுத்துதல் துறை சார்பிலும் 707 மாவட்டங்கள், உணவுப்பொருட்கள் உற்பத்திக் காக ஏற்கெனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்குவிவசாய கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனியாரால் தொடங்கப் படும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு மத்திய அரசு 35 சதவீத மானியம் அளிக்கிறது.

இந்த் பட்டியலில் இடம் பெற்ற மாவட்டங்களில் பெரும் பாலானவை தற்போது புதிய திட்டத்திலும் அடையாளம் காணப்பட்டுள்ளன. தமிழகத்தில் 36 மாவட்டங்கள் இரண்டு பட்டியல்களிலும் இடம் பெற்றுள்ளன.

SCROLL FOR NEXT