காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி : கோப்புப்படம் 
இந்தியா

உட்கட்சி மோதலா? - அதிருப்தி தலைவர்களால் 5 மாநிலத் தேர்தலிலும் வென்றால் சிறப்புதான்: குலாம்நபி ஆசாத் பேச்சுக்கு அபிஷேக் மனு சிங்வி பதிலடி

ஏஎன்ஐ

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிருப்தி தலைவர்களின் உதவியால் காங்கிரஸ் கட்சி வென்றால் அது சிறப்புதான் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் பேச்சுக்கு அபிஷேக் மனு சிங்வி பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் கேரளாவுக்குச் சென்றிருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யான ராகுல் காந்தி, வடக்கு, தெற்கு எம்.பி. என்று பிரித்துப் பேசினார். இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா, கபில் சிபல் எதிர்ப்புத் தெரிவித்து விளக்கம் அளிக்கக் கோரியிருந்தனர்.

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைமை தேவை என சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 மூத்த தலைவர்களில் பலர் இன்று ஜம்முவில் கூடியுள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தின் அறக்கட்டளை சார்பில் நடக்கும் சாந்தி சம்மேளனம் நிகழ்ச்சியில் அதிருப்தி தலைவர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.

இதில் பேசிய குலாம் நபி ஆசாத், " அனைத்துச்சாதி, மதங்கள், மக்களையும் காங்கிரஸ் கட்சி ஒரே மாதிரியாகத்தான் நடத்துக்கிறது, மரியாதை அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

மூத்த தலைவர் கபில் சிபல் பேசுகையில் " காங்கிரஸ் கட்சி உண்மையில் பலவீனமடைந்துவிட்டது. அதற்காகத்தான் நாங்கள் இங்குக் கூடியுள்ளோம், கட்சியை வலுப்படுத்தக்கூடியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

ஆனந்த் சர்மா பேசுகையில் " கட்சியின் நலனுக்காகவே நாங்கள் குரல் கொடுக்கிறோம். அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் வலுப்பட வேண்டும். புதிய தலைமுறையினர் கட்சிக்குள் வர வேண்டும். இனிமேலும் கட்சி பலவீனமடையக்கூடாது" எனத் தெரிவித்தார்.

இந்த 3 தலைவர்களும் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தும், ராகுல் காந்தியின் வடக்கு தெற்கு பேச்சுக்கு மறைமுகமாகப் பதில் அளித்தும் பேசினர்.

இந்த 3அதிருப்தி தலைவர்களின் பேச்சுக்கும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் சிங்வி இன்று அளித்தார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

அதிருப்தி தலைவர்கள் அனைவரும் சேர்ந்து 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெல்வதற்கு உதவி செய்தால் அது சிறப்பாக இருக்கும். அதில் ஒரு தலைவர், (குலாம்நபிஆசாத்) காங்கிரஸ் கட்சி தன்னை பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

தன்னை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக்கொண்டதாகக் கூறிய அந்த தலைவரைத் தான் காங்கிரஸ் கட்சி 7முறை எம்.பி.யாக்கியது. அந்த மூத்த தலைவரைச் சோனியா காந்தி முதல்வராக்கினார். இந்திரா காந்தி தனது அமைச்சரவையில் அவருக்கு இடம் கொடுத்தார். கட்சியில் பொதுச்செயலாளராகப் பதவி வழங்கப்பட்டது. நாடுமுழுவதும் 20 மாநிலங்களைக் கண்காணிக்கும் பதவி வழங்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT