மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 8,702 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக 2-வது இடத்தில் கேரளாவில் 3,677 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிட் 19 தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1.37 கோடியை தாண்டிவிட்டது.இன்று மாலை வரை, 1,37,56,940 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
சுகாதாரப் பணியாளர்களில் 66,21,418 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 20,32,994 பேருக்கு 2வது டோஸ் தடுப்பூசியும், முன்களப் பணியாளர்களில் 48,18,231 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 41ம் நாளான நேற்று, 8,01,480 தடுப்பூசிகள் போடப்பட்டன.
இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,55,986-ஆக உள்ளது. ஆனால், 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,000-க்கும் குறைவாக உள்ளது.
20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் 19 உயிரிழப்பு ஏற்படவில்லை.
நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 1,07,50,680ஆக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 97.17 சதவீதம். கடந்த 24 மணி நேரத்தில், 12,179 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 16,577 பேருக்கு புதிதாக கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 8,702 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக கேரளாவில் 3,677 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கோவிட் தொற்று காரணமாக 120 பேர் உயிரிழந்துள்ளனர்.