இந்தியா

இந்தியாவிலேயே 100 சதவீத வாகன உதிரி பாகம் தயாரிப்பு: அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

இந்திய வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தற்போது வாகன உதிரி பாகங்கள் 70 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. அதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். வாகன உதிரி பாகங்களை முழுமையாக இந்தியாவில் தயாரிக்க அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை முற்றிலும் நிறுத்த வேண்டும். வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்நாட்டு தயாரிப்பை தீவிரமாக அணுக வேண்டும். இல்லையென்றால், உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு வரி உயர்த்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் வாகன உற்பத்தியில் இந்தியாவை உலக அளவில் முக்கிய கேந்திரமாக மாற்றுவதை இலக்காகக்கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரிபேசினார்.

இந்திய வாகன தயாரிப்பாள சங்க தலைவர் அனுச்சி அயுகாவா பேசும்போது, ‘‘ மின்னணு பாகங்கள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அரசின் கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். செமிகன்டெக்டர் தயாரிப்புக்கு அரசின் ஆதரவு அவசியம் தேவை’ என்று கேட்டுக் கொண்டார்.

SCROLL FOR NEXT