இந்தியா

விவசாயிகளுக்காக டெல்லியில் போராடாமல் கேரளாவில் வந்து குரல் கொடுப்பதா? - ராகுல் காந்திக்கு பினராயி விஜயன் கேள்வி

செய்திப்பிரிவு

விவசாயிகளுக்காக டெல்லியில் போராடாமல் கேரளாவில் வந்து குரல் கொடுப்பதா என ராகுல் காந்திக்கு பினராயி விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டுக்கு பயணம் மேற்கொண்டார். திரிகைபட்டா முதல் முட்டில் வரையிலான 6 கிலோமீட்டர் தொலைவுக்கு டிராக்டர் பேரணியில் ராகுல் காந்தி பங்கு கொண்டார்.

அதன்பின் பூத்தாடி பஞ்சாயத்தில் குடும்பஸ்ரீ சார்பில் நடந்த திட்டங்களை ராகுல் காந்தி தொடங்கி வைத்தார். பின்னர் திருவனந்தபுரத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

‘‘காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேரளாவிற்கு வந்து டிராக்டரில் பயணம் செய்கிறார். மீனவர்களுடன் கடலுக்குச் செல்கிறார். டெல்லியில் பல நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் அதனை ராகுல் காந்தி புறக்கணித்து விட்டார். அங்கு சென்று போராடவில்லை. ஆனால் ராகுல் காந்தி கேரளாவுக்கு வந்து விவசாயிகளுக்கு ஆதரவு குரல் கொடுக்கிறார். இது விநோதமாக உள்ளது.’’ எனக் கூறினார்.

SCROLL FOR NEXT