இந்தியா

காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி

செய்திப்பிரிவு

பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 4ம் தேதி, ஒருநாள் பயணமாக காஷ்மீர் செல்கிறார்.

காஷ்மீரின், கத்ரா- உதம்பூர் இடையேயான ரயில் சேவையை நரேந்திர மோடி துவக்கிவைக்கிறார். வைஷ்ணவிதேவி கோவில் இருக்கும் கத்ராவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருடாவருடம் வருகின்றனர். எனவே இந்த ரயில் பாதை காஷ்மீர் மக்களுக்கு மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளுக்கும் பயன் தரக்கூடியதாகும்.

மேலும், பாரமுல்லா பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 240 மெகாவாட் நீர்மின் உற்பத்தி திட்டத்தையும் அவர் துவக்கி வைக்கிறார்.

பிரதமர் மோடியுடன் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா, பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்தர் சிங் உள்ளிட்டோர் காஷ்மீர் செல்கின்றனர். பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற பின் முதன்முறையாக காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார்.அங்கு அவர் அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் ஆளுநர் என்.என். ஓராவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

SCROLL FOR NEXT