இந்தியா

தீவிரவாத செயலை ஒடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு தேவை: ஐநா கூட்டத்தில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தீவிரவாத செயல்களை ஒடுக்க உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார்.

ஐநா சபையின் மனித உரிமைகள் தொடர்பான கூட்டம் நடந்து வருகிறது. இதில் கானொலி வாயிலாகக் கலந்துகொண்ட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:

தீவிரவாதம் மனிதகுலத்துக்கு பெரும் ஆபத்தாக உள்ளது. அது மனிதனின் அடிப்படை உரிமையான வாழ்வதற்கான உரிமையைப் பறிக்கிறது. ஒரு பாதிக்கப்பட்ட தரப்பாக இந்தியா, தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையில் முன்னிலையில் இருந்து வருகிறது.

தீவிரவாதத்தை ஒடுக்குவதற் கான 8 செயல் திட்டங்களை சென்ற மாதம் இந்திய அரசு, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு குழுவின் கூட்டத்தில் பட்டியலிடப்பட்டது. மனித உரிமைப் பிரச்சினைகள் கரோனா காலகட்டத்தில் தீவிரமடைந்து உள்ளது. இந்த சவால்களை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்.

மனித உரிமைகளை பாதுகாப்பதில் இந்தியா கொண்டிருக்கும் முனைப்புதான் கரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை கையாண்டதில் பிரதிபலித்து. 80 கோடி இந்தியர்களுக்கு நேரடியாக உணவு வழங்கியதன் மூலமும், 40 கோடி இந்தியர்களுக்கு நிதி உதவி வழங்கியதன் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை இந்தியா பூர்த்தி செய்துள்ளது. தவிர, கரோனா காலகட்டத்தில் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை 150 -க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT