புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2 நாள் பயணமாக நேற்று கேரள மாநிலத்துக்கு வருகை தந்தார்.
மலப்புரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மக்களின் நலனுக்காக பாஜக தலைமையிலான மத்திய அரசு எதையும் செய்யவில்லை. நீதித்துறை மீது தனது அதிகாரத்தை செலுத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயல்கிறது. தான் விருப்பப்பட்டதை எல்லாம் நீதித் துறை செய்ய வேண்டும் என்று பாஜக அரசு விரும்புகிறது. நீதித் துறை சுதந்திரமாக செயல்படுவதற்கு மத்திய அரசு விடவில்லை.
நீதிமன்றங்கள் மட்டுமல்லாமல் மக்களவை, மாநிலங்களவையிலும் பாஜக இவ்வாறே செய்து வருகிறது. மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற அரசுகள் தொடர்ந்து கவிழ்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தேர்தலில் வெற்றி பெற்றது என்பது தோல்வியுற்றதே என்பதாக இருக்கிறது" என்றார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இல்லாததால் கவிழ்ந்தது. அந்த சம்பவத்தைக் குறிப்பிட்டே ராகுல் காந்தி இவ்வாறு பேசினார்.