இந்தியா

கரோனா தடுப்பூசி போடும் பணியில் தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த வேண்டும்: விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி கோரிக்கை

செய்திப்பிரிவு

தனியார் துறையினரை ஈடுபடுத்து வதன் மூலம் மிக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கரோனா தடுப்பு ஊசி போட முடியும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தும்போது 60 நாளில் 50 கோடி பேருக்கு தடுப்பு ஊசி போடும் பணியை நிறைவேற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார். இது நடைமுறை சாத்தியமான விஷயம் என்று குறிப்பிட்ட அவர், அரசின் முயற்சிக்கு உறுதுணையாக இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கரோனா தடுப்பு ஊசி மருந்தை சீரம் நிறுவனம் ஒரு குப்பி ரூ.300 விலையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களுக்கு அளிக்க, இதை மக்களுக்கு போட ரூ.100செலவாகும். ஆக ரூ.400 செலவில்பொதுமக்களுக்கு தடுப்பு ஊசிபோட முடியும். இந்த நடவடிக்கையில் தனியாரும் ஈடுபடுவதன்மூலம் அதிக எண்ணிக்கையிலான வர்களுக்கு குறுகிய காலத்தில் தடுப்பு ஊசி போட முடியும் என்றார்.

இந்தியத் தொழிலகக் கூட்ட மைப்பு (சிஐஐ) உள்ளிட்ட தொழில் சம்மேளனங்களால் தொழில் நிறுவனங்களில் தடுப்பு ஊசி போடும் பணியை முழு வீச்சில் செயல்படுத்த முடியும். ஆனால் இதற்கு அரசு அனுமதி அவசியம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கரோனா தடுப்பு நடவடிக் கைக்கு இந்த பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்திருந்த நிதி அமைச்சர், தேவைப்பட்டால் மேலும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று குறிப் பிட்டிருந்தார்.

இந்த நிதி மூலம் 50 கோடி பேருக்கு தடுப்பு ஊசி போட முடியும். அதாவது ஒரு நபருக்கு ரூ.700 என்ற கணக்கில் அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

தனியார் துறையினர் இதில் ஆர்வம் காட்டினாலும், இந்த விஷயத்தை தனியார் துறையினர் சிறப்பாக செய்ய முடியாது என அரசு கருதுகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், பட்ஜெட்டுக்கு பிந்தைய கலந்துரையாடலுக்கு பெங்களூ்ரு தொழில் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கோடக் மஹிந்திரா வங்கி நிர்வாக இயக்குநர் உதய் கோடக், டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டிவி நரேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT