மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட் மாநிலங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதன் எதிரொலியாக நாட்டில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.50 லட்சமாக உயர்ந்துள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தம் 21.15 (21,15,51,746) கோவிட்-19 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,20,216 பரிசோதனைகள் செய்யப்பட்டன.
பிப்ரவரி 22, 2021 காலை 8 மணி வரை, தமிழகத்தில் 3,70,846 பேர், புதுச்சேரியில் 10,104 பேர் உட்பட, நாடு முழுவதும் 1,11,16,854 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
2,32,317 முகாம்களில் 63,97,849 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 9,67,852 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 37,51,153 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் 37-ஆம் நாளில் (பிப்ரவரி 21, 2021) 1,429 முகாம்களில் 31,681 பயனாளிகளுக்கு (24,471 பயனாளிகளுக்கு முதல் டோஸ், 7,210 பயனாளிகளுக்கு இரண்டாவது டோஸ்) நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,06,99,410 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.22 சதவீதமாக பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 14,199 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,695 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1.50 லட்சமாக (1,50,055) பதிவாகியுள்ளது. இது நாட்டின் மொத்த பாதிப்பில் 1.36 சதவீதமாகும்.
மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட் மாநிலங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை மீண்டும்1.50 லட்சமாக உயர்ந்துள்ளது.