வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்புப் பணத்தை மீட்பதில் தனது ஆலோசனைகளை அருண் ஜேட்லி புறக்கணித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.
"அருண் ஜேட்லியின் உத்திகளை தொடர்ந்து மத்திய அரசு கடைபிடித்தால் கருப்புப் பணத்தை ஒருபோதும் மீட்க முடியாது.
நான் ஒரு 6 அம்ச திட்டத்தை நிதி அமைச்சகத்துக்கு இது தொடர்பாக பரிந்துரை செய்தேன். ஆனால் ஜேட்லி எனது ஆலோசனைகளைக் கேட்கவில்லை. ரூ.120 லட்சம் கோடி கருப்புப் பணம் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் ஆண்டு வரி வருவாயை விட 60 மடங்கு அதிகம்" என்றார்.
மோடி தலைமையிலான மத்திய அரசு தனது அறிவுரைகளைக் கேட்காததற்குக் காரணம் அருண் ஜேட்லி என்று அவர் மேலும் சாடினார்.
மேலும் தெரிவிக்கும் போது, ராகுல் காந்தியை ‘கமிஷன் ஏஜெண்ட்’ என்றும் சோனியா, ராகுல் ஆகியோரின் கூட்டு சொத்து மதிப்பு 40 பில்லியன் டாலர் என்றும் கூறினார் சுப்பிரமணியன் சுவாமி.