உள்நாட்டுப் போர் மூண்டுள்ள இராக் நாட்டில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 600 தொழிலாளர்கள் சிக்கித் தவிப்பது தெரியவந்துள்ளது. அவர்களை பத்திரமாக மீட்க மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக துணை முதல்வர் முகமது அலி செய்தியாளர்களிடம் கூறினார்.
இது தொடர்பாக ஹைதரா பாதில் அவர் கூறியதாவது: 600 தொழிலாளர்களையும் மீட்டு, ஹைதராபாத் அழைத்து வர மத்திய வெளியுறவு துறையை அணுகியுள்ளோம். முதல்வர் கே. சந்திரசேகர ராவும் மத்திய அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறார்.
040-23220603, 9440854433 எண்களில் தொடர்பு கொண்டு உறவினர்கள் நிலவரம் அறிய தலைமைச்செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு துணை முதல்வர் தெரிவித்தார்.