நேபாள கலவரத்தில் 4 மாதேஸிகள் சுட்டுக்கொல்லப் பட்டனர்.
நேபாளத்தில் அண்மையில் புதிய அரசியல் சாசனம் அமல் படுத்தப்பட்டது. அது தங்களுக்கு எதிராக இருப்பதாக குற்றம் சாட்டி மாதேஸி இன மக்கள் போராட் டங்களை நடத்தி வருகின்றனர். இந்திய-நேபாள எல்லையில் அவர்கள் முற்றுகையில் ஈடுபட் டிருப்பதால் சரக்கு போக்குவரத்து முடங்கியுள்ளது.
இந்நிலையில் நேபாளத்துக்கு சென்ற சரக்கு வாகனங்களை குறிவைத்து மாதேஸி போராட் டக்காரர்கள் நேற்று கற்கள், பெட்ரோல் குண்டுகளை வீசிய தாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பார்தா, ரூபானி பகுதிகளில் போலீஸார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் வீரேந்திர ராம், நாகேஸ்வர யாதவ், சங்கர் தாஸ், திலீப் தாஸ் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். 44 பேர் படுகாயம் அடைந்தனர்.