: சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும் ‘கோ எலெக்ட்ரிக்’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கிவைத்தார். அப்போது பேசுகையில் அனைத்து அரசு அதிகாரிகளும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தவும், கட்டாயமாக்கவும் வேண்டும் எனக் கூறினார். தன்னுடைய துறை சார்ந்த அதிகாரிகளிடம் இதனை அறிவுறுத்துவதாக உறுதியளித்தார். மேலும் மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம் அவரது துறை அதிகாரிகளிடமும் இதனை செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார். டெல்லியில் 10 ஆயிரம் வாகனங்கள் மின்சார வாகனங்களாக இயக்கினாலே, அதன் மூலம் மாதம் ரூ.30 கோடி சேமிக்கலாம் என்று கூறினார். மின்சார சாதனங்களில் சமையல் செய்வது சூழலுக்குத் தூய்மையானது என்பதோடு எரிவாயு இறக்குமதியின் தேவையையும் குறைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.