இந்தியா

டூல்கிட் வழக்கில் திஷா ரவிக்கு 3 நாள் நீதிமன்ற காவல்

செய்திப்பிரிவு

டூல்கிட் வழக்கில் சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியின் 5 நாள் போலீஸ் காவல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, அவரை 3 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஸ்வீடனை சேர்ந்த பருவநிலை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க் டூல்கிட் லிங்க் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார். இந்த டூல்கிட்டை பெங்களூருவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி, மும்பையை சேர்ந்தநிகிகா ஜேக்கப், அவரது கூட்டாளிஷாந்தனு ஆகியோர் உருவாக்கிய தாக டெல்லி போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக திஷா ரவியை கடந்த 14–ம் தேதி கைது செய்தனர். அவரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் திஷாவின் போலீஸ் காவல் முடிவுக்குவந்ததால் அவர் நேற்று டெல்லிபாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அரசு வழக்கறிஞர், “விசாரணையில் நிகிதா மற்றும் ஷாந்தனு மீது திஷா பழி சுமத்துகிறார். எனவே வரும் 22-ம் தேதிஷாந்தனு, திஷாவை நேருக்குநேர்வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்கு திஷாவை 3 நாள் போலீஸ் காவலில் வைத்திருக்க அனுமதிக்க வேண்டும்” என்றார்.

இதை ஏற்காத நீதிமன்றம் அவரை 3 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT