இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இண்டியா) திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டு வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இதற்கு ஆர்.எஸ்.எஸ்.ஸின் கிளை அமைப்பான பாரதிய மஸ்தூர் சங்கம் சில நாட்களுக்கு முன்பு கண்டனம் தெரிவித்தது.
ஆர்.எஸ்.எஸ்.ஸின் மற்றொரு கிளை அமைப்பான சுதேசி ஜக்ரன் மாஞ்ச் நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி மகாஜன் கூறியதாவது:
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசின் கொள்கைகளை பாஜக அரசும் பின்பற்றி வருவது வேதனையளிக் கிறது. பாதுகாப்பு, ஊடகத் துறை, இணைய வர்த்தகம் என பல்வேறு முக்கிய துறை களில் அன்னிய முதலீட்டு வரம்பை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இது நாட்டு நலனுக்கு எதிரா னது.
இந்த நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்விவகாரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.