இந்தியா

ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை அமல்படுத்த கோரி முன்னாள் ராணுவ வீரர்கள் விருதுகளை திருப்பித்தர முடிவு

செய்திப்பிரிவு

‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை’ உடனடியாக அமல்படுத்த கோரி, முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் விருதுகளை திருப்பி அளிக்க முடிவெடுத்துள்ளனர்.

ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக முன்னாள் ராணுவ வீரர்கள் போராடி வருகின்றனர். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இத்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது. நீண்ட ஆலோசனைகளுக்குப் பின், ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதிய’ திட்டம் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதற்கிடையில் பிஹார் சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட தால், தேர்தல் நடத்தை விதிமுறை களின்படி ஓய்வூதிய திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. இப்போது பிஹார் தேர்தல் முடிந்துவிட்டது. நாளை வாக்கு எண்ணிக்கை நடக் கிறது. அதன்பிறகு ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், அரசு அறிவித்துள்ள திட்டத்தில் குறைகள் உள்ளன. ஓய்வூதிய கணக்கீடு சரியில்லை என்று கூறி அதை முன்னாள் ராணுவ வீரர்கள் ஏற்க மறுத்துள்ளனர். ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ என்ற திட்டத்துக்கு அளிக்கப்பட்ட விளக்கம், அதற்கு வழங்கப்பட்ட அனுமதியின்படி இதனை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை அடுத்த வாரம் தொடங்குவோம் என்று முன்னாள் ராணுவ வீரர்கள் நேற்று அறிவித்தனர்.

இதுகுறித்து இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் இயக்க (ஐஇஎஸ்எம்) தலைவர் மேஜர் ஜெனரல் சட்பீர் சிங் நேற்று கூறியதாவது:

ஒரே பதவி ஒரே ஓய்வூதியத்தை விரைந்து அமல்படுத்த கோரி, முதற்கட்டமாக முன்னாள் ராணுவ வீரர்கள் தாங்கள் பெற்ற விருதுகளை (மெடல்கள்) அடுத்த வாரம் திருப்பி அளிப்பார்கள். அரசுக்கு நாங்கள் அளித்த காலம் முடிந்து விட்டது. இப்போது எங்கள் போராட்டம் 2-வது கட்டத்துக்கு வந்துள்ளது.

இவ்வாறு சட்பீர் சிங் கூறினார்.

‘‘ஓய்வூதிய திட்டத்தை அறிவித்த பின் எங்களை அழைத்து மத்திய அரசு பேசவில்லை. அரசுக்கு நாங் கள் பாரமாக இருப்பதாக கருதி னால், எங்களுக்கு விருதுகளும் பாரமாக இருக்கிறது’’ என்று கேப்டன் வி.கே. காந்தி கூறினார்.

நாட்டில் 647 மாவட்டங்களிலும் உள்ள ராணுவ வீரர்கள் தங்கள் விருதுகளை 9, 10 தேதிகளில் திருப்பி அளிக்க முடிவெடுத்துள்ளனர். மேலும், டெல்லி ஜந்தர் மந்திரில் அடுத்த வாரம் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் அமல்படுத்தப்பட்டால் 26 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களும், ராணுவத்தில் பணிபுரிந்த கணவர்களை இழந்த 6 லட்சம் பெண்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு முன்பு அமல்

‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டம் தீபாவளிக்கு முன்பாக அமலுக்கு வரும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித் துள்ளார்.

அரசுக்கு நாங்கள் பாரமாக இருப்பதாக கருதினால், எங்களுக்கு விருதுகளும் பாரமாக இருக்கிறது என்று கேப்டன் வி.கே. காந்தி கூறினார்.

SCROLL FOR NEXT