மக்களவை தேர்தல் தோல்விக்கு பின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் முதன் முறையாகப் புதிய குழு அமைய உள்ளது.
ராகுலை தலைவராக தேர்ந் தெடுப்பதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள் ஒருவழியாக அடங்கி விட்ட தாகக் கூறப்படுகிறது. இனி காங்கிரஸ் தலைமைக்கு ராகுலின் பெயரை அறிவிப்பதில் எந்த சிக்க லும் இல்லை எனக் கருதப்படும் நிலையில், அவரால் அமைக்கப் பட்ட புதிய குழு செயல்படத் தயாராக உள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் காங்கிரஸின் நிர்வாகிகள் வட் டாரம் கூறும்போது, ‘தேசிய பொதுச் செயலாளர் மற்றும் செயலாளர் பதவிகளில் இளம் தலைவர்கள் ராகுலால் களம் இறக்கப்பட உள்ள னர். இதற்காக இவ்விரு பதவிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளது. பழைய தலைவர்களில் தவிர்க்க முடியாதவர்களில் சில ருக்கு மட்டும் தேசிய செய்தி தொடர் பாளர் போன்ற பதவிகள் கொடுக்க வாய்ப்புள்ளது” என்றனர்.
புதிதாக பொறுப்பேற்பவர்கள் செயல்படும் விதத்தை கண் காணிக்க ஒரு குழு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந் துரையை பொறுத்து செயல்படாத வர்கள் ராகுலால் பதவி இறக்கம் செய்யப்பட்டு விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
விரைவில் சட்டப்பேரவை தேர் தலை சந்திக்கவிருக்கும் பஞ்சாப் மற்றும்உத்தரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் காங்கிரஸுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை ராகுல் டெல்லிக்கு அழைத்து நேர்முகத் தேர்வு நடத்தியதாக தெரிய வந்துள் ளது. இதற்கான அறிவிப்பு, காங்கிர ஸின் புதிய குழு அறிவிப்புடன் சேர்த்து பிஹார் தேர்தல் முடிவுக ளுக்கு பின் வெளியிடப்பட உள்ளது.
சோனியாவின் அரசியல் ஆலோ சகராக அகமது பட்டேல் இருப்பது போல், ராகுலுக்கும் ஒருவர் அமர்த் தப்பட உள்ளார். ஆனால், இவர் இளம் தலைவராகவே இருப்பார் எனக் கருதப்படுகிறது. ஜிதேந்திரா சிங், ரந்தீப்சுர்ஜேவாலா, ஆர்.பி.என்.சிங், தீபேந்தர் ஜுதா மற்றும் அஜய் மாக்கன் ஆகியோர் ராகுலின் இளம் குழுவில் முக்கியத் தலைவர்களாக வலம் வருவார் கள் என்றும் கூறப்படுகிறது. இவர் களில் ஒருவர் ராகுலின் அரசியல் ஆலோசகராக அமர்த்தப்படலாம் என்றும் கூறுகின்றனர். தலைமை பொறுப்பை ராகுல் ஏற்பது பற்றிய அறிவிப்பு எப்போது என்பது மட்டும் கணிக்க முடியாமல் உள்ளது.
ராகுலின் புதிய குழுவில், 60 வயதைக் கடந்த மூத்த தலைவர் கள் பெயர் இடம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்களுக் காக தனியாக ஒரு புதிய ‘சிந்தனை யாளர்கள் குழு’ அமைக்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.
எனினும், 60 வயதிற்கும் மேற் பட்ட தலைவர்களான குலாம்நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், திக்விஜய் சிங், கமல்நாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் முக்கியப் பொறுப்புகளில் தொடர் வார்கள் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.