ஸ்டாலின் - சந்திரசேகர ராவ்: கோப்புப்படம் 
இந்தியா

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநில முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் இன்று (பிப்.17) தன் 67-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். சந்திரசேகர ராவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்திரசேகர ராவுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "தெலங்கானா மாநில முதல்வரும் தென்னகத்தைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவருமான சந்திரசேகர ராவுக்கு திமுக சார்பில் நெஞ்சார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நாட்டுக்கும் தெலங்கானா மாநிலத்திற்கும் அவர் பல்லாண்டு காலம் சேவையாற்றிட வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT