நாட்டில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. நாட்டில் இன்று கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.36 லட்சமாக (1,36,872) குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.25 சதவீதம்.
இதுவரை 1.06 கோடிக்கும் அதிகமானோர் (1,06,33,025) குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 11,805 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் குணமடைந்தோர் வீதம் 97.32 சதவீதமாக உள்ளது. இது உலகிலேயே மிக அதிகம்.
கடந்த 24 மணி நேரத்தில் 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இன்று காலை 8 மணி வரை, கோவிட் தடுப்பூசி போட்ட சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களின் எண்ணிக்கை 87 லட்சத்தை கடந்த விட்டது.
தமிழகத்தில் 2,69,219 , புதுவையில் 6,513 பேர் உட்பட 87,20,822 பேர் இன்று காலை 8 மணி வரை கோவிட் தடுப்பூசி போட்டுள்ளனர்.
31வது நாளான நேற்று (2021, பிப்ரவரி 15) 4,35,527 பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட்டது.
கடந்த 24 மணி நேரத்தில் 9,121 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. 81 பேர் உயிரிழந்துள்ளனர்.