திடீரென வீட்டுக் காவலில் வைத்தது ஏன் என்று தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர் ஒமர்அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு காஷ்மீர் போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆகஸ்ட் மாதம்ரத்து செய்யப்பட்டது. அப்போதுஅசம்பாவிதங்களை தவிர்க்க ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள்வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். நிலைமை சீரானதும் ஊரடங்கும்வீட்டுக் காவலும் விலக்கிக் கொள்ளப்பட்டது. - காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இந்நிலையில் தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவர் ஒமர்அப்துல்லா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
நான், எனது தந்தையும் எம்.பி.யுமான பரூக் அப்துல்லா உள்ளிட்ட எனது குடும்பத்தினர் அனைவரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளோம். இதுதான் புதிய ஜனநாயகமா? எவ்வித விளக்கமும் அளிக்காமல் எங்களை வீட்டுக் காவலில் வைத்தது ஏன்?
இவ்வாறு ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். அவரதுவீட்டு வாயிலில் நிறுத்தப்பட்டி ருக்கும் போலீஸ் வாகனங்களின் புகைப்படங்களையும் ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து காஷ்மீரின் ஸ்ரீநகர் போலீஸ், ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா தாக்குதல் நினைவு நாளாகும். இந்த நாளில் தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டங்களை தீட்டியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. முக்கிய பிரமுகர்கள் வெளியில்நடமாடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் எடுக்கப்பட்டுள்ளன" என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.