இந்தியா

‘‘சுவாரஸ்யமான டெஸ்ட் போட்டி’’- கழுகு பார்வையில் சேப்பாக்கம் மைதானம்: சென்னை வந்த பிரதமர் மோடி ட்வீட்

செய்திப்பிரிவு

பிரதமர் மோடி சென்னை சேப்பாக்கம் மைதானத்தை விமானத்தில் இருந்து கழுகு பார்வையில் படம் பிடிக்கப்பட்ட காட்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க சென்னை வந்தார். காலையில் விமானம் மூலம் வந்த அவர், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்குச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் நேரு உள் விளையாட்டரங்கம் வந்தடைந்தார். பிரதமர் வரும் வழி எங்கும் அதிமுக, பாஜக தொண்டர்கள் அவருக்குக் கொடி அசைத்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்புரையாற்றினார். அடுத்து முதல்வர் பழனிசாமி பேசினார். நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசினார்.

இந்தநிலையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி இன்று சென்னை வந்த நிலையில் இந்தபோட்டி நடைபெற்றது.

SCROLL FOR NEXT