இந்தியா

‘‘நன்றி சென்னை’’- அன்பான வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி:  பிரதமர் மோடி ட்வீட்

செய்திப்பிரிவு

அன்பான வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க சென்னை வந்தார். காலையில் விமானம் மூலம் வந்த அவர், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்குச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் நேரு உள் விளையாட்டரங்கம் வந்தடைந்தார். பிரதமர் வரும் வழி எங்கும் அதிமுக, பாஜக தொண்டர்கள் அவருக்குக் கொடி அசைத்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்புரையாற்றினார். அடுத்து முதல்வர் பழனிசாமி பேசினார். நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை நிகழ்ச்சி தொடர்பாக பதிவிட்டுள்ளார். வரவேற்பு தொடர்பான படங்களையும் வெளியிட்டுள்ளார். அவர் அந்த பதிவில் ‘‘நன்றி சென்னை’’- அன்பான வரவேற்பால் மிகுந்த மகிழ்ச்சி’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT