உத்தராகண்ட் மாநிலம், சமோலி மாவட்டம், ஜோஷிமத் பகுதியில் கடந்த 6-ம் தேதி பனிப்பாறை உடைந்து உருகியதால் தபோவன் அணையை ஒட்டியுள்ள சுரங்கத் தில் 39 பேர் சிக்கியுள்ளனர். வெள்ளப்பெருக்கின்போது பாறை, சகதி மண்ணால் சுரங்கம் மூடப்பட்டது. வளைவு, நெளிவுகள் கொண்ட இந்த சுரங்கம் சுமார் 12 கி.மீ. நீளம் கொண்டதாகும்.
பாலத்துக்குள் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவு வதால் ஏதாவது ஓர் இடத்தில் தொழிலாளர்கள் உயிர் பிழைத்து இருக்கக்கூடும் என்று நம்பப் படுகிறது.
இந்திய திபெத் எல்லை பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் விவேக் பாண்டே கூறும்போது, "சுரங்கத்தை மூடியிருக்கும் மண், பாறைகளை அகற்ற தேசிய பேரிடர் மீட்புப் படை, ராணுவ குழுக்களோடு இணைந்து இரவு, பகலாக பணியாற்றி வருகிறோம். பிரதான சுரங்கத்துக்கு பக்கவாட்டில் புதிய சுரங்கத்தை தோண்டி வருகிறோம்" என்று தெரிவித்தார்.