இந்தியா

கண்காணிப்பில் இருப்பது போல் உள்ளது; காவலை நீக்குங்கள்: திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா

பிடிஐ

கண்காணிப்பில் இருப்பது போல் உள்ளது; காவலை நீக்குங்கள் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டெல்லி காவல்துறை தலைவர் எஸ்.என்.ஸ்ரீவத்ஸாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில் அவர், "கடந்த 12-ம் தேதி, பாரகம்பா சாலை காவல் நிலையம் அதிகாரி என்னை எனது வீட்டில் சந்தித்தார்.

பின்னர், எல்லை பாதுகாப்பு காவலர்கள் மூவர் வீட்டின் முன் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். அவர்கள் என் வீட்டிற்கு யார் வருகிறார்கள், நான் எங்கு சென்று வருகிறேன் என்பதைக் கண்காணிக்கின்றனர்.

இத்தேசத்தின் அரசியல் சாசனத்தின்படி தனிநபர் சுதந்திரம் என்பது அடிப்படை உரிமை. அப்படியிருக்கு என் வீட்டின் முன் காவலர்கள் நிறுத்தப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இது குறித்து நான் கேள்வி எழுப்பியமைக்கு, எனது பாதுகாப்புக்காக ஆயுதம் ஏந்திய காவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

ஆனால், சாமானியப் பெண்ணான நான் அப்படியொரு பாதுகாப்பைக் கேட்கவும் இல்லை. ஆகையால், என் வீட்டின் முன் நிறுத்தியிருக்கும் காவலர்களைத் திரும்பப்பெற வேண்டுகிறேன்" என்று எழுதியுள்ளார்.

SCROLL FOR NEXT