பிரிட்டன் மற்றும் துருக்கி நாடு களுக்கு அரசு முறை பயணமாக வரும் 12ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புறப்பட்டுச் செல்கிறார்.
இந்த சுற்றுப்பயணத்தின் முதல் நாடாக பிரிட்டனுக்கு செல்லும் அவர், அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூனை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகிறார். லண்டனில் இந்திய சட்டமேதை அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை திறந்து வைக்கிறார்.
இதுகுறித்து மோடி நேற்று வெளி யிட்ட அறிக்கையில், ‘பிரிட்டனுடன் வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகை யில், இந்த சுற்றுப்பயணம் அமை யும். தவிர, இரு நாட்டுக்கும் இடையே வலுவான நட்புறவு ஏற்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இரண்டாவதாக துருக்கி செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நடக்கும் ‘ஜி-20’ உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகிறார்.