இந்தியா

கரோனா நோய் தொற்றை கண்டறிய மோப்ப நாய்களுக்கு ராணுவத்தினர் பயிற்சி

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறிய மோப்ப நாய்களுக்கு இந்திய ராணுவத்தினர் பயிற்சியளித்துள்ளனர்

ராணுவத்தில் உள்ள நாய்களில் சிப்பிப்பாறை மற்றும் காக்கர் ஸ்பேனியல் இனத்தைச் சேர்ந்தவற்றுக்கு மோப்ப சக்தி பயிற்சி அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் வியர்வை மற்றும் சிறுநீர் ஆகியவற்றை மோப்பம் பிடித்து இவை பயிற்றுவிக்கப்பட்டன.

டெல்லியிலிருந்து ராணுவத்தினர் முகாம்களுக்குத் திரும்பும்போது கரோனா நோய் தொற்றுபரிசோதனை கட்டாயமாகும். இதற்காக மருத்துவ பரிசோதனை களும் நடத்தப்படுகின்றன. இதனிடையே நாய்களின் மோப்ப சக்தி மூலம் நோயைக் கண்டறிய முடியும் என ராணுவத்தினர் நிரூபித்துள்ளனர்.

நோய் தாக்கியவரை இந்த இரு வகை நாய்களும் எவ்விதம் கண்டுபிடிக்கின்றன என்பதை நேரடி விளக்கக் காட்சிகள் மூலமும் ராணுவத்தினர் விளக்கினர்.

கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் வியர்வை மாதிரிமற்றும் சிறுநீரை இவை மோப்பம் பிடித்து பழக்கப்பட்டன. கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் உடல் திசுக்களின் செயல்பாடுகளில் மாறுபாடு ஏற்படுவது, நோய் அறிகுறி உள்ளிட்டவை தென்படும். இவற்றை மருத்துவ ரீதியாக கண்டறிவதைப் போல மோப்ப சக்தி மூலம் இந்த நாய்கள் கண்டுபிடித்துவிட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கரோனா பாதிப்பு மாதிரிகள் மீரட்டில் உள்ள ராணுவமருத்துவமனை மற்றும் நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக ளிலிருந்து பெறப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புற்று நோயாளிகள், மலேரியா, நீரிழிவு,பார்க்கின்சன்ஸ் போன்ற நோய்களுக்கு ஆளானவர்களைக் கண்டறிவதற்கும் இதுபோன்ற பயிற்சி பெற்ற நாய்கள் ஈடுபடுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

சராசரியாக 3 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டாலும், அதில் 18 மாதிரிகள் மோப்ப நாய்களால் அடையாளம் காணப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்குப் பிறகு ராணுவத்தினர் இடம்பெயரும் முகாம்களில் இவை பணியில் ஈடுபடுத்தப்படுவதாக தெரி விக்கப்பட்டுள்ளது.

சளி உள்ளிட்டவற்றை எடுத்து அதை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி முடிவுகள் வரும் கால நேரத்தை விட மிகக் குறைந்த நேரத்தில் மோப்ப சக்தி நாய்கள் நோய் தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறிந்துவிடுவது மிகவும் உதவியாக இருப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடிசிகிச்சை அளிக்க வழி ஏற்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

SCROLL FOR NEXT