உத்தராகண்ட் மாநிலத்தில் பனிப் பாறை வெடித்து உருகியதில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியதில் இதுவரை 31 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மாய மான 175 பேரின் நிலை என்ன வென்று தெரியவில்லை.
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் ஜோஷிமத் என்ற பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பனிப்பாறை வெடித்து சரிந்து விழுந்ததில் தவுலிகங்கா, அலக் நந்தா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் தவு லிகங்கா ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் ரைனி கிராமத்தில் அமைக்கப்பட்டு வந்த நீர்மின் நிலையங்கள் அடித்து செல்லப்பட்டன.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு இருந்த 200-க்கும் மேற் பட்ட ஊழியர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தவுலிகங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 2-வது நீர்மின் நிலையங்களில் 2 சுரங்கங்கள் அமைக்கப்பட்டு உள் ளன. திடீர் வெள்ளம் காரணமாக சுரங்கம் முற்றிலும் நீரில் மூழ்கியது. அதற்குள் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.
இதில் முதல் சுரங்கத்தில் சிக்கி இருந்த 16 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். 2-வது சுரங்கத்துக்குள் 39 பேர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் 500 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 31 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 175 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்கள் அனைவரும் வெள்ளத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பனிப்பாறை
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை (இஸ்ரோ) சேர்ந்த தொலை உணர்வு ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் செயற் கைக்கோள் படங்கள் மூலமாக ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது பனிப்பாறை சரிவு ஏற்பட்ட இடத்தில் வெடிப்பு ஏற்பட்டதற்கான எந்த அடையாளமும் தெரிய வில்லை. பெரிய அளவில் பனிச் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால்தான் திடீர் வெள்ளம் ஏற்பட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
பனிச்சரிவு ஏற்பட்ட இடம் கடல் மட்டத்துக்கு மேல் 5,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுமார் 14 கிலோமீட்டர் சுற்றளவுக்கு பனிச் சரிவு ஒரே நேரத்தில் ஏற்பட்டு இருக் கிறது. இதன் மூலம் 3 கோடி கியூபிக் மீட்டர் தண்ணீர் வெளியேறி இருக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
- பிடிஐ