பிரதிநிதித்துவப் படம். 
இந்தியா

மும்பையில் வெடிகுண்டு புரளி கிளப்பியவர் ஹரியாணாவில் கைது

பிடிஐ

மும்பையில் சில மல்டிபிளெக்ஸ் வளாகங்களில் குண்டுவெடிக்கப் போவதாக புரளியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர், பன்வாரி சிங் (19), ஹரியாயாணாவைச் சேர்ந்தவர் இவர் ஜனவரி 22 அன்றைய ட்விட்டர் பதிவில் மும்பை காவல்துறை மற்றும் அவர்களது ஆணையர் ஆகியோருக்கு இணைத்து மும்பையில் குண்டுவெடித்ததாக வதந்தி பரப்பியிருந்தார். இது நகரில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து மும்பை காவல் துணை ஆணையர் (சைபர் கிரைம்) ரஷ்மி கராண்டிகர் கூறியதாவது:

கடந்த ஜனவரி 22 அன்று பன்வாரி சிங் என்ற நபர் கமண்டோ சிங் என்ற தனது பொய்யான ட்விட்டர் கணக்கிலிருந்து மும்பையில் குண்டு வெடிக்கப்போவதாக புரளி கிளப்பியிருந்தார்.

மும்பையின் புறநகர் மலாட் மற்றும் அந்தேரி மற்றும் அதன் அருகில் உள்ள பால்கர் மாவட்டத்தில் வசாய் ஆகிய இடங்களில் திரையிடப்பட்ட "மேடம் சீப் மினிஸ்டர்" என்ற இந்தித் திரைப்படம் வெளியான ஏழு மல்டிபிளெக்ஸில் குண்டு வெடிப்புகள் நிகழும் என்றும் அவரது ட்விட்டரில் கூறப்பட்டிருந்தது.

காவல்துறையினர் இந்த செய்தியைப் பற்றி அறிந்த பிறகு, அவர்கள் பல்வேறு மல்டிபிளெக்ஸில் சோதனைகளை மேற்கொண்டனர், பின்னர் அதை ஒரு மோசடி ட்வீட் என்று அறிவித்தனர். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்டவர் ட்வீட்டை நீக்கிவிட்டார்.

வழக்குப் பதிவு செய்த மும்பை காவல்துறையினர் சைபர் செல்பிரிவினர் மூலம் குற்றவாளியைத் தேடத் தொடங்கினர். இதனை அடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட பன்வாரி சிங் சிலதினங்களுக்கு முன் ஹரியாணாவில் கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாறு காவல் துணை ஆணையர் (சைபர் கிரைம்) தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் செய்தியை ட்வீட் செய்த மொபைல் ஃபோனையும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT