இந்தியா

மும்பை தாக்குதல் வழக்கு: ஹெட்லி மனைவியிடம் விசாரணை நடத்த முடிவு

பிடிஐ

மொராக்கோவில் உள்ள மும்பை தாக்குதல் தீவிரவாதி டேவிட் ஹெட்லியின் முன்னாள் மனைவி யிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

மும்பையில் கடந்த 2008, நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித் தனமான தாக்குதலில் வெளி நாட்டினர் உட்பட 160-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு தொடர்பு இருப்பதை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

பாகிஸ்தான் ராணுவ மேஜர்கள் இக்பால் மற்றும் சமீர் அலி இந்த தாக்குதலுக்கு திட்டம் வகுத்து கொடுத்ததும் தெரியவந்தது. இதன் காரணமாக இருவருக்கும் எதிராக இந்தியா சார்பில் சர்வதேச ரெட்கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கைதாகியுள்ள மும்பை தாக்குதல் தீவிரவாதி டேவிட் ஹெட்லி உளவு பார்ப்பதற்காக இந்தியா வந்தபோது மனைவி அவுதல்ஹாவையும் உடன் அழைத்து வந்திருந்தார். அப்போது மும்பையின் தாஜ் ஹோட்டல், ஓபராய் ஹோட்டல் உட்பட பல்வேறு பகுதிகளை படம் பிடித்த ஹெட்லி, அதனை பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளி டம் அளித்துள்ளார். அதன் பிறகே மும்பைக்குள் நுழைந்து தீவிரவாதி கள் தாக்குதல் நடத்தினர். மேலும் ஹெட்லி பாகிஸ்தானில் இருந்த போது லஷ்கர்-இ-தொய்பா தீவிர வாதிகளை சந்தித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி அவுதல்ஹா உடனடியாக அங் கிருந்த அமெரிக்க துாதரகத்தில் ஹெட்லி மீது புகார் அளித்துள்ளார். மேலும் ஹெட்லி தீவிரவாதி என்பது தெரியவந்ததும் கடந்த 2007-ம் ஆண்டு விவகாரத்து பெற்று, மொராக்கோவில் வாழ்ந்து வருகிறார்.

அவரிடம் விசாரணை நடத்தி னால் மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான பல்வேறு சந்தேகங் களுக்கு விடை கிடைக்கும் என தேசிய புலனாய்வு அதிகாரிகள் நம்புகின்றனர். குறிப்பாக பாகிஸ் தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு இருக்கும் தொடர்பை இந்த விசாரணை மூலம் வெளிக் கொண்டு வர முடியும் என்றும் கருதுகின்றனர்.

எனவே, அவுதல்ஹாவிடம் நேரில் விசாரணை நடத்த அனுமதி கேட்டு மொராக்கோ அரசுக்கு தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.

ஏற்கெனவே அவரது வாக்கு மூலத்தை பதிவு செய்து அனுப்பும் படி கடந்த 2012-ம் ஆண்டு தேசிய புலனாய்வு அதிகாரிகள் கடிதம் அனுப்பி இருந்தனர். ஆனால் மொழி பிரச்சினை காரணமாக தேசிய புலனாய்வு அதிகாரிகளின் ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே விசாரணை நடத்தி மொராக்கோ அதிகாரிகள் அந்த வாக்குமூலத்தை அனுப்பி இருந்தனர். இதனால், இந்த முறை மொராக்கோ அரசு கேட்டுக் கொண்டபடி பிரெஞ்சு மொழியில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT