இந்தியா

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்ற இயலாது: அமைச்சர் மனோகர் பாரிக்கர் தகவல்

பிடிஐ

முன்னாள் ராணுவ வீரர்களின் நீண்டநாள் கோரிக்கையான ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் தொடர் பாக மத்திய அரசு கடந்த சனிக் கிழமை அறிவிக்கை வெளியிட் டது. இதற்கு முன்னாள் ராணுவ வீரர்கள் அதிருப்தி தெரிவித் துள்ளனர்.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று டெல்லியில் கூறியதாவது:

முன்னாள் ராணுவ வீரர்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய நீதிக்குழு அமைக்கப்படும்.

ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்பட் டுள்ளது. கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் காணப்பட்ட விருப்ப ஓய்வு தொடர் பான குழப்பம் தற்போது நீக்கப்பட் டுள்ளது. அனைத்து கோரிக்கை களையும் ஏற்றுக்கொள்வதாக அரசு அறிவித்தாலும், சிலர் அடுத்த கட்ட கோரிக்கைகளை வைப்பது வழக்கம்தான்.

முன்னாள் ராணுவ வீரர் களின் முக்கியப் பிரச்சினை தீர்க் கப்பட்டுள்ளது. இதன் பிறகும் பிரச்சினை என்றால் நீதிக்குழு அதற்கு தீர்வு காணும். இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.

இதனிடையே விமானப் படை தளபதி அரூப் ராகா கூறும்போது, “ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் தொடர்பான அரசின் உத்தரவை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதில் குறைபாடுகள் இருந்தால் தீர்வு காணப்படும்” என்றார்.

ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் தொடர்பாக மத்திய அரசு கடந்த சனிக்கிழமை வெளியிட்ட அறி விக்கை பெரும்பாலும், பாரிக்கர் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ஒத்தே உள்ளது. என்றாலும் விருப்ப ஓய்வு பெறுவோர், ஒரே பதவி ஒரே ஓய்வூதிய வரம்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT