இந்தியா

கடவுள், புனித நூல்களின் பெயரில் யாரும் டிரேட் மார்க் உரிமை கோர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

பிடிஐ

கடவுள் மற்றும் புனித நூல்களின் பெயர்களில் எவரும் டிரேட் மார்க் உரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பிஹாரில் ‘ராமாயண்’ என்ற பெயரில் லால் பாபு பிரியதர்ஷி என்பவர் ஊதுபத்தி தயாரித்து வருகிறார். இந்நிலையில் ‘ராமாயண்’ என்ற பெயருக்கு டிரேட் மார்க் உரிமை மறுக்கப்பட்டதால் அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகி னார்.

இவரது மனு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “திருக்குர்ரான், பைபிள், குருகிரந்த சாகிப், ராமாயணம் போன்ற புனித நூல்களின் பெயர் களில் எவரும் டிரேட் மார்க் உரிமை கோர முடியாது. கடவுள்கள் மற்றும் புனித நூல்களின் பெயர்களில் டிரேட் மார்க் உரிமை அளித்தால் அதனால் மக்களின் உணர்வுகளை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. டிரேட் மார்க் சட்டத்திலும் இதற்கு இடமில்லை. மனுதாரர் தனது லேபிளில் ராமன், சீதை, லட்சுமணரை பயன்படுத்துகிறார். இதுவும் ஆட்சேபனைக்குரியதே.

மனுதாரர் ‘ராமாயண்’ என்ற பெயருக்கு முன்னரோ அல்லது பின்னரோ ஏதேனும் ஒரு வார்த் தையை இணைத்து, அந்த வார்த்தைகள் புனித நூல் என்று கருதப்படாத வகையில் இருக்குமானால், டிரேட் மார்க் உரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம்” என்று கூறியுள்ளனர்.

SCROLL FOR NEXT