இந்தியா

விவசாயிகள் போராட்டம் குறித்த கருத்து கிரேட்டா தன்பர்க் மீது டெல்லி போலீஸார் வழக்கு

செய்திப்பிரிவு

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு அமெரிக்க பாப் பாடகி ரிஹானா கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ட்விட்டரில் ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்கின் பதிவு வெளியானது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக சிஎன்என் இணைய தள செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட கிரேட்டா, “இந்தியாவில் விவ சாயிகளின் போராடத்துக்கு நாங்கள் ஒற்றுமையுடன் துணை நிற்கிறோம்” என்று கூறியிருந்தார்.

வெளிநாட்டுப் பிரபலங்களின் பதிவுகள் தொடர்பாக டெல்லி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கிரேட்டாவின் பதிவு தொடர்பாக நேற்று வழக்குப் பதிவு செய்தனர். இதில் குற்றச் சதி மற்றும் மக்களிடையே விரோத உணர்வை ஏற்படுத்தியாக கிரேட்டா மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த செய்தி நேற்று வெளியானதைத் தொடர்ந்து கிரேட்டா தனது கருத்துகளை இரட்டிப்பாக்கினார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “நான் இப்போதும் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளேன். அவர்களின் அமைதிவழிப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT