தனது தாய்க்கு சேலை அனுப்பிய தற்காக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் தாய்க்கு பிரதமர் மோடி சால்வை ஒன்றை பரிசளித்திருந்தார். அதைப் பெற்றுக்கொண்ட ஷெரீப் தனது ட்விட்டரில், ‘சால்வை அனுப்பிய பிரதமர் மோடிக்கு நன்றி. என்னுடைய தந்தை அந்தச் சால்வையை எனது தாயிடம் ஒப்படைத்துவிட்டார்' என்று கூறியிருந்தார்.
அந்த அன்பின் பரஸ்பர வெளிப்பாடாக பிரதமர் மோடியின் தாயாருக்கு ஷெரீப் சேலை ஒன்றை அனுப்பியுள்ளார்.
"நவாஸ் ஷெரீப்ஜி என் தாய்க்கு வெள்ளை நிறத்தில் அழகான சேலை ஒன்றை அனுப்பியிருக்கிறார். நான் அவருக்கு மிகுந்த நன்றி உடையவனாகிறேன்.
உடனடியாக அந்தச் சேலையை என் தாய்க்கு அனுப்பி வைப்பேன்" என்று தனது ட்விட்டரில் மோடி கூறியிருக்கிறார்.