பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் இன்று பதவியேற்கிறார். இதற்காக பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் குமார் தலை மையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்த மகா கூட்டணி 178 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது.
இதைத்தொடர்ந்து பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் இன்று பதவியேற்கிறார். பதவியேற்பு விழா, பாட்னா காந்தி மைதானத்தில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சியையொட்டி, 2,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாட்னா மண்டல ஆணையர் ஆனந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்ட போதிலும், வேறு நிகழ்ச்சிகள் காரணமாக அவர் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக, நாடாளுமன்ற விவகா ரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு பங்கேற்கவுள்ளார்.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில முதல்வர்கள் மம்தா பானர்ஜி, அர்விந்த் கேஜ்ரிவால், வீரபத்ர சிங், சித்தராமையா, தருண் கோ கோய், நபம் துகி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தவிர, தமிழகத்திலிருந்து திமுக தரப்பில் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் டி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பாஜக எம்.பி. சத்ருகன் சின்ஹாவுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. ஆனால், தவிர்க்க முடியாத தனிப்பட்ட காரணங்க ளால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடிய வில்லை என சின்ஹா தெரிவித் துள்ளார். “நண்பரிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. ஆனால், தனிப்பட்ட முக்கியமான நிகழ் வுகள் காரணமாக பங்கேற்க இயலவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.