இந்தியா

கரோனா மொத்த பாதிப்பில் கேரளா, மகாராஷ்டிராவில் 70 சதவீதம்: ஆய்வு செய்ய மத்தியக்குழு பயணம்

செய்திப்பிரிவு

கேரளா, மகாராஷ்டிராவில் கோவிட்-19 மேலாண்மைக்கான பொது சுகாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடுவதற்காக மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட அந்த மாநிலங்களுக்கு இரண்டு உயர்மட்ட குழுக்களை அனுப்ப மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

பெரும்பாலான மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கோவிட்-19 தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்து வரும் சூழலில், கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

நாட்டில் தற்போது கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 70 சதவீதத்தினர் இந்த இரண்டு மாநிலங்களை மட்டுமே சேர்ந்தவர்கள்.

மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளும், திருவனந்தபுரத்தின் சுகாதார, குடும்ப நலத்திற்கான மண்டல அலுவலகத்தின் வல்லுநர்களும், புதுடெல்லி லேடி ஹார்டிங் மருத்துவ கல்லூரியின் வல்லுநர்களும் கேரளாவிற்குச் செல்லவுள்ள குழுவில் இடம்பெறுவார்கள்.

மத்திய குழுவினர், மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து கள நிலவரத்தை அறிந்து, பாதிப்புகளைக் குறைப்பதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளை பரிந்துரை செய்வார்கள்.

SCROLL FOR NEXT