இந்தியா

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளும் - எதிர்க்கட்சியினரிடையே இணக்கம்

பிடிஐ

குளிர்கால கூட்டத்தொடரின் முதல்நாளான நேற்று, ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் நேசத்துடன் உரையாடினர். பிரதமர் மோடி எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களின் அமர்விடத்துக்குச் சென்று சந்தித்தார்.

மக்களவையில் அமைச் சர்கள், ஆளும் கூட்டணி உறுப்பி னர்களைச் சந்தித்த பிறகு, எதிர்க் கட்சித் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, முலாயம் சிங் யாதவ், திரிணமூல் காங்கிர்ஸ மூத்த தலைவர் சுதிப் பண்டோபாத்யாயா, அதிமுக மூத்த தலைவர் எம். தம்பிதுரை, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மூத்த தலைவர் ஜெய் பிரகாஷ் நாராயண் யாதவ் உள்ளிட்டோரை மோடி சந்தித்தார். அப்போது பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். அந்த சமயத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அவையில் இல்லை.

முலாயம் சிங் யாதவ், மோடி, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் சிறிது நேரம் உரையாடி சத்த மாக வாய்விட்டு சிரித்தனர். அத் வானியையும் சந்தித்த மோடி அவருக்கு வணக்கம் தெரிவித்து பேசிக் கொண்டிருந்தார்.

அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், வெங்கய்ய நாயுடு உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும் எதிர்க்கட்சியினர் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்று பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

மாநிலங்களவையில் அவைத் தலைவர் அருண் ஜேட்லி, எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்திருந்த குலாம் நபி ஆசாத், சரத் யாதவ், ஆனந்த் சர்மா, சீதாராம் யெச்சூரி, மாயாவதி உள்ளிட்டோரைச் சந்தித்து உரையாடினார்.

முதல் நாளின் தொடக்கத்தில் இரு கட்சியினரும் இணக்கம் காட்டினர்.

SCROLL FOR NEXT