இந்தியா

பெங்களூரு கப்பன் பூங்காவில் பெண்ணை பலாத்காரம் செய்த காவலர்கள் கைது

இரா.வினோத்

பெங்களூருவில் தங்களிடம் வழிகேட்ட பெண்ணை கப்பன் பூங்கா காவலர்கள் பலாத்காரம் செய்தனர். இதுதொடர்பாக பூங்கா காவலர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பெங்களூரு (கிழக்கு) காவல் துணை ஆணையர் சந்தீப் பாட்டீல் செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கர்நாடக மாநிலம் தும‌கூருவை சேர்ந்த 34 வயது பெண்மணி, பெங்களூரு கப்பன் பூங்காவில் உள்ள டென்னிஸ் கிளப்பில் இணைய முடிவெடுத்துள்ளார். நேற்று முன் தினம் டென்னிஸ் கிளப்புக்கு வந்து உறுப்பினர் சேர்க்கைக்கான ஆவணங்களை நிரப்பி கொடுத்துள்ளார்.

அப்போது டென்னிஸ் கிளப் நிர்வாகம் சார்பாக மேலும் சில ஆவணங்கள் கோரப்ப‌ட்டுள்ளன.

இதனால் அந்த பெண் பெங்களூருவிலேயே தங்கி, மறுநாள் ஆவணங்களை சமர்ப் பிக்க முடிவு செய்துள்ளார்.

எனவே டென்னிஸ் கிளப்பில் இருந்து இரவு 9 மணிக்கு மெஜஸ்டிக் பேருந்து நிலை யத்துக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது கப்பன் பூங்காவில் உள்ள தோட்ட கலைத்துறை மையத்தின் 2 காவலாளிகளிடம் அந்த பெண் முகவரி கேட்டுள்ளார்.

அதற்கு காவலாளிகள் 2 பேரும் அந்த பெண்ணுக்கு வழிகாட்டு வதாக கூறி, தனிமையான இடத்துக்கு அழைத்து சென்றுள் ளனர். அங்கு அந்த பெண்ணை தாக்கி, 2 காவலாளிகளும் அவரை பலாத்காரம் செய்துள்ளனர். காவலாளிகளிடம் இருந்து தப்பிய பெண், நள்ளிரவு 2.30 மணியளவில் சித்தகங்கா சதுக்கம் அருகே அமர்ந்திருந்தார்.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரிடம் விசாரித்த போது, தான் பலாத்காரம் செய்யப்பட்டதை தெரிவித்துள்ளார்.

வழக்கு பதிவு செய்த கப்பன் பூங்கா காவல் துறையினர் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட 2 காவலாளிகளையும் கைது செய்தனர்.

கைதான 2 பேரும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் 2 ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாவலர் பணியில் சேர்ந்துள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளது''என்றார்.

மகளிர் அமைப்பு எதிர்ப்பு

பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக பள்ளி குழந்தை களும், இளம்பெண்களும் தொடர்ந்து பாலிய‌ல் பலாத்காரத் துக்கு உள்ளாக்கப்ப‌டும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனைக் கண்டித்து மகளிர் அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

SCROLL FOR NEXT