இந்தியா

மத்திய பட்ஜெட் சில பெரு நிறுவனங்களுக்கு மட்டும் பயனளிக்கும்; சாமானிய மக்களின் சங்கடத்தை அதிகரிக்கும்: அர்விந்த் கேஜ்ரிவால்

ஏஎன்ஐ

மத்திய பட்ஜெட் சில பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே பயனளிக்கும். சாமானிய மக்களின் சங்கடத்தை அதிகரிக்கும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கேஜ்ரிவால் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "இந்த பட்ஜெட் சில பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாக ஆதாயம் தருவதாக அமையும். அதேவேளையில் விலைவாசி உயர்வுக்கு வித்திட்டு சாமானிய மக்களின் சங்கடங்களை அதிகரிக்கும்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக இன்று காலை 2021- 22 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இது அவரது 3-வது மற்றும் முதல் டிஜிட்டல் பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது அவர், சுகாதாரம், உள்கட்டுமைப்பு வசதிகள் மேம்பாடு, புத்தாக்கம், ஆய்வு மற்றும் வளர்ச்சி உள்ளிட்ட 6 தூண்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மத்திய பட்ஜெட்டுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய பட்ஜெட் சில பெரு நிறுவனங்களுக்கு மட்டும் பயனளிக்கும்; சாமானிய மக்களின் சங்கடத்தை அதிகரிக்கும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT