இந்தியா

நீதி விசாரணையின் போது மின்னணு ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

செய்திப்பிரிவு

நீதி விசாரணையின் போது சிடி உள்ளிட்ட மின்னணு ஆவணங் களை ஆதாரமாக தாக்கல் செய்ய நீதிமன்றங்கள் அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஷம்ஷேர் சிங் என்பவர் மீது பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. சொத்து பிரச் சினை காரணமாகவே தன் மீது அபாண்டமான முறையில் இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்ப தாக வாதாடிய ஷம்ஷேர் சிங், அதற்கு ஆதாரமாக சிறுமியின் தந்தையுடன் தான் பேசிய தொலை பேசி உரையாடலை தாக்கல் செய்ய அனுமதி கேட்டார்.

ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஷம்ஷேர் சிங் உச்ச நீதிமன்றத்தில் முறை யிட்டார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தொலைபேசி உரையாடலை சிடியில் பதிவு செய்து அவர் ஆதாரமாக தாக்கல் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஆனால் சிடியை ஆதாரத்துக்கான ஆவணமாக கருத முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது. இதைத் தொடர்ந்து, இவ்வழக்கு நேற்று மீண்டும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் பண்ட் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது::

குற்றம்சாட்டப்பட்டவர் தான் ஒரு நிரபராதி என்பதை நிரூபிக்க சிடியை ஆதாரமாக தாக்கல் செய்யக்கூடாது என தெரிவித்து கீழமை நீதிமன்றங்கள் தவறு செய்கின்றன.

வழக்கு என்று வரும்போது சிடி உள்ளிட்ட மின் னணு ஆவணங்களை ஆதாரமாக தாக்கல் செய்வதை அரசு தரப்பு அனுமதிக்கவோ, மறுக்கவோ செய்யலாம். அதே சமயம் அதன் உண்மை தன்மையை கண்டறிய தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்து அதன் பின் இறுதி முடிவு எடுப்பது நல்லது. ஆகவே மின்னணு ஆவணங் களை ஆதாரமாக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT